Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன்.. கேட்ட ராதிகா.. கலாய்த்த பாக்யராஜ்
கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்யராஜிடம், கிழக்கே போகும் ரயில் படத்தின் போது தான் அவ்வளவு மோசமாகவா நான் இருந்தேன் என்று ராதிகா சரத்குமார் கேட்டார்.
கோடீஸ்வரி நிகழ்ச்சியின் பொங்கல் சிறப்பாக இன்று இரவு பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பாக்கியராஜ் கலந்துக்கொள்கின்றனர்.
அதற்கான ப்ரோமோவில் சினிமாவில் என்னுடன் அதிகமா சண்டை போட்டவர், எனக்கு நிறைய அவார்ட்ஸ் வாங்கிக் கொடுத்தவர் இவர்தான் என்று பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பாக்யராஜை அறிமுகம் செய்கிறார் ராதிகா.
கிழேக்கே போகும் ரயில் படத்துக்கு ஹீரோயின் கூட்டிகிட்டு வராங்கன்னு சொன்னவுடனே சாவித்திரி பத்மினி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சி இருந்தேன்னு சொன்னார் பாக்கியராஜ்.
அதற்கு ராதிகா, ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன் என்று அப்பாவியாக கேட்டார். அதை இப்போ எப்படி சொல்றது என்று அதிரடியாக சொன்னார் பாக்கியராஜ். உடனே மூவரும் சிரித்தார்கள்.
