Tamil Cinema News | சினிமா செய்திகள்
பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இவங்கதான்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலயே
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா, ஆண்ட்ரியா நடித்து இருப்பார்கள். முக்கியமாக ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் மற்றும் பாடல் வரிகள் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.
2007ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக சிம்ரனை தான் உறுதி செய்து இருந்தார்களாம். ஆனால் சிம்ரன் நடிக்க முடியாத சூழ்நிலையில் தான் ஜோதிகா அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்தாராம்.
சிம்ரன் அப்போது வாரணம் ஆயிரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாகவும் ஒரு சில பிரச்சனைகளால் தான் நடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த படத்தில் ஜோதிகா தனித்துவமான கதாபாத்திரத்தில் நின்று ஜெயித்து இருப்பார் என்றே கூறலாம். ஒரு குடும்பத் தலைவனாக இருந்து சூழ்நிலையை காரணம் காட்டி செய்த தவறுகளால் சரத்குமார் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பார்.
அதிலிருந்து எப்படி மீண்டு வருவார் என்பதே கௌதம் மேனன் மிக தத்ரூபமாக இந்த படத்தில் வெளிக்கொண்டு வந்திருப்பார். இந்த படமும் உண்மை கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று கவுதம் மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.
