fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாவக்கதைகள் விமர்சனம்! நான்கில் யார் படம் பெஸ்ட் தெரியுமா ?

Reviews | விமர்சனங்கள்

பாவக்கதைகள் விமர்சனம்! நான்கில் யார் படம் பெஸ்ட் தெரியுமா ?

டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் நேரடி ரிலீஸ் ஆனது தமிழ் ஆந்தாலஜி தொகுப்பான பாவகக்கதைகள். ஆணவக்கொலை என்ற மையக்கருத்தை கொண்டு ரெடியாகி உள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ளனர். RSVP Movies நிறுவனம் மற்றும் Flying Unicorn நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

சுமார் டு சூப்பர் என வரிசை படுத்தி இப்படத்தை பற்றி பார்ப்போம்.

விக்னேஷ் சிவன் – லவ் பண்ணா விட்டுரணும் –  அஞ்சலி (டபிள் ஆக்ஷன்) மற்றும் கல்கி கோச்செலின் மெயின் ரோலில் நடித்துள்ள படம். ஊரில் உள்ள அஞ்சலி, கார்  ட்ரைவரை காதலிக்கும் காரணத்தால் மகளை கொலை செய்ய சம்மதிக்கிறார் அப்பா. தான் லெஸ்பியன் என நம்பவைத்து, தன் காதலனுடன் எஸ்கிப் ஆகிவிடுகிறான் இன்னொரு அஞ்சலி. நம்பகத்தன்மை குறைவாக உள்ள படம் இது தான். அனிருத் இசை பக்கபலம். எனினும் சிரிப்பும் வரவில்லை, நம் சிந்தயையும் தூண்டவில்லை.

வெற்றிமாறன் – ஓர் இரவு  சாதி  வெறி ஊறிய அப்பா பிரகாஷ் ராஜ், வேற்று ஜாதியை சேர்ந்தவனை மணக்கும் மகளாக சாய் பல்லவி. மகள் கர்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு சீமந்தம் நடத்துகிறேன் என அழைத்து வந்து விஷம் கொடுத்து கொலை செய்கிறார். தன் மகள் கீழ் ஜாதி பையனுடன் இருப்பதையே விரும்பாத இவர் அவளுக்கு குழந்தை பிறக்க கூடாது என நினைப்பது போன்று தோன்றுகிறது.

எனினும் தனது அடுத்த மகள்களின் திருமணம் பாதிக்க கூடாது, சமூகத்தில் மதிப்பு வேண்டும் என அவர் செய்வதாக முடித்துள்ளார்.

கெளதம் மேனன் – வான்மகள்  கவுதம் மேனன் மற்றும் சிம்ரன் முக்கிய வேடம். 12 வயது பெண் குழந்தை கற்பழிக்கப்படுகிறாள், அதன் பின் அந்த குடும்பம் படும் அல்லல் மற்றும் துன்பத்தை காமித்துள்ளனர். ஏன் போலீஸை தவிர்க்கிறார்கள், மகளை இந்த சமூகத்திற்காக கொலை செய்ய வேண்டுமா? அது நியாமா எனவும் பேசியுள்ளார்.

பெரும்பாலான வீடுகளில் இது போன்ற சம்பவத்தை மூடி மறைக்க தான் செய்கின்றனர். இதனை தான் காமித்துள்ளார் இயக்குனர். எனினும் அண்ணன் கோவப்பட்டு செய்யும் செயல் சினிமாத்தனத்தின் உச்சம்.

சுதா கொங்காரா – தங்கம்  நான்கு படங்களில் எமோஷனல் உச்சம் இப்படம். பீரியட் பிலிம் டைப். பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் சாந்தனு, காளிதாஸ், பவானி ஸ்ரீ என நடிப்பில் சாதிக்க துடிப்பவர்களை கொண்ட டீம். ஹிந்து முஸ்லீம் காதல் ஒருபுறம், நட்பு மறுபுறம், பெண் சுபாவம் உடைய ஆணின் நிலை என 30 நிமிடத்திற்குள் பல விஷயம் உள்ளது இப்படத்தில்.

ஷான் கருப்பசாமி அவர்களின் இந்த கதையை தேர்ந்தெடுத்தது பெரிய ப்ளஸ். பல நாட்களுக்கு படத்தை பார்த்த பின்பும் தங்கத்தின் பாதிப்பு இருக்கும்.

pavakathaikal net flix

சினிமாபேட்டை அலசல் – OTT தளம் எனில் சுதந்திரம் உண்டு இயக்குனர்களுக்கு, எனவே புகுந்து விளையாடலாம். எனினும் இப்படங்களை பார்க்கும் பொழுது நெட் பிலிக்ஸ் டீம்மின் குறிக்கிடுதல் அதிகமாக இருந்திருக்குமோ என்றே தோன்றுகிறது. உள்ளதை உள்ளபடி ககாமிப்பதை விட, தென் இந்தியாவில் நெட் பிலிக்ஸ் தளத்தை பரபலப்படுத்த எடுக்கப்பட்ட படங்கள் போன்றே தோன்றுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – வெற்றிமாறன் மற்றும் கெளதம் மேனன் படங்களில் நாம் டிவி நியூஸில் பார்க்கும் விஷயம் தான். விக்கி நெகட்டிவ் விஷயத்தை கூட தனக்கே உரிய ஸ்டைலில் காமித்துள்ளார். சுதா புதிய ஒரு பரிணாமத்தை காமித்துள்ளார். அவர் மட்டுமே உயர்ந்து நிற்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top