பாடலாசிரியராகவும், நடிகராகவும் இருக்கும் பா. விஜய், சிறிய இடைவெளிக்கு பின்  “ஆருத்ரா” என்ற பெயரில் மீண்டும் ஒரு திரில்லர் படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.

பாக்யராஜ் அவர்களின் பாக்யா வாரஇதழில் பணியாற்றியவர். பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பா.விஜய். 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சேரனின் ஆட்டோகிராப் படத்தில், ‘ ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக தேசிய விருது வாங்கியவர்.

இவர் பாடல்கள் எழுதுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ஞாபகங்கள்’. அதையடுத்து ‘இளைஞன்’,‘நைய்யப்புடை’ ‘ஸ்ட்ராபரி’ ஆகிய படங்களிலும் நடித்தார். ஸ்ட்ராபெர்ரி  பேய் படத்தினை இயக்கியவரும் இவரே.

அதிகம் படித்தவை:  வெளியானது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Pa Vijay, Robo Shankar in Strawberry Movie

அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆருத்ரா என்ற பெயரில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு – வித்யாசாகர் இசை. பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்துடன் இப்பொழுது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் நிறைவு பணியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  வெளியானது நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி மலையாள பட ட்ரைலர் !

இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.