பா. விஜய்

பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழில் பணியாற்றியவர். பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சேரனின் ஆட்டோகிராப் படத்தில், ‘ ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக தேசிய விருதும் வாங்கியவர்.

அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ஞாபகங்கள்’. அதையடுத்து ‘இளைஞன்’,‘நைய்யப்புடை’ ‘ஸ்ட்ராபரி’ ஆகிய படங்களிலும் நடித்தார். ஸ்ட்ராபெர்ரி பேய் படத்தினை இயக்கியவரும் இவரே. மேலும் இப்படத்தில் சென்னையில் நடந்த உண்மை சம்பவமான பேருந்து விபத்து மற்றும் தனியார் பள்ளியின் மெத்தன போக்கு போன்றவற்றை துகிலுரித்து காட்டியிருந்தார்.

Aruthra

தற்பொழுது ஆருத்ரா என்ற பெயரில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு – வித்யாசாகர் இசை. பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்துடன் இப்பொழுது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையை மையப்படுத்தி படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை ஆளுநருக்கு கேள்வி ஒன்றை கேட்கும் விதமாக வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். மேலும் அரசு, சட்டம், போலீஸ் என மூன்றுமாக பெற்றோரே மாறினால் தான் பெண் குழந்தைகளை காக்க முடியும் என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

#JusticeForAsifa எண ஹாஸ் டாக் இட்டு இணையத்தில் பரவி வருகின்றது இந்த வீடியோ.