fbpx
Connect with us

Cinemapettai

அடுத்தடுத்து 5 படங்களை தயாரிக்கும் பா ரஞ்சித்.. இயக்குனரகள் யார் யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 5 படங்களை தயாரிக்கும் பா ரஞ்சித்.. இயக்குனரகள் யார் யார் தெரியுமா?

பா ரஞ்சித் சினிமாவை ஒரு மீடியமாக வைத்து மக்களிடம் கருத்து மாறுதல்கள், சமூக அவலங்களை சுட்டி காட்ட முடியும் என நம்புபவர். இவர் இயக்கும் படங்களிலும் சரி தயாரிக்கும் படங்களிலும் இதனை நாம் கண் கூடே பார்க்க முடியும். நீலம் புரொடக்ஷன்ஸ் இவரின் தயரிப்பு நிறுவனம். முதலில் டாகுமெண்டரி படங்கள் தான். பின்னர் பதட்டத்துடன் இவர் ரிலீஸ் செய்த முதல் படம் பரியேறும் பெருமாள், படம் வைரல் ஹிட். அடுத்ததாக இந்த டீம்மின் படைப்பு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது இப்படம். இந்த இரண்டு வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையில் மனிதர் தொடர்ச்சியாக படம் தயாரிக்க உள்ளார்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் 5 தமிழ் படங்களை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் 5 படங்களை இயக்க உள்ளனர்.

தனுஷ் படத்தை முடித்த பின் மாரி செல்வராஜின் மூன்றாவது படமாக இருக்குமாம். விஜய் சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதி அவர்களின் இரண்டாவது படமும் இந்த பாணரில் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top