Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பா ரஞ்சித் வழங்கும் வேற லெவல் படம்.. வைரலாகுது டைட்டில், வித்யாசமான பர்ஸ்ட் லுக்

குதிரைவால் – யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோ, அவருக்கு ஜோடியாக காலா படப்புகழ் அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பா.ரஞ்சித் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள படம். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் ரெடி செய்துள்ளார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

வழக்கமான சினிமாவிலிருந்து சற்றே மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிசம் கலந்த சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். உளவியல், ஆழ்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் கலந்த படமாம் இது.

kuthiraivaal FLP

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அதிகமாம். மேலும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இப்படம் கொடுக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். .

Continue Reading
To Top