India | இந்தியா
திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.. பா ரஞ்சித்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது முன்வைக்கப்படும் தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சிக்கும் போது இந்து தெய்வங்களை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதையடுத்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் திருமாவளவன் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிகவினரும் ன கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
இந்த சூழலில் இயக்குனர் பா ரஞ்சித் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , ஒரு கருத்தையொற்றி வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும், ஆனால், இங்கு வசைகள், தனிமனித தாக்குதல்கள், அவதூறு நிகழ்த்தப்படுவதே பண்பாடாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் மீது முன்வைக்கப்படும் தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
