கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. இதை ரஞ்சித்தும் பல பேட்டிகளில் உறுதி செய்தார். ஆனால் சூர்யா அடுத்ததாக கொம்பன் புகழ் முத்தையா படத்தில் ஹீரோவாக நடிக்கபோவதாக அறிவித்தார்.

இதனால் கடுப்பான ரஞ்சித், சூர்யா படத்தை இயக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கிடையில் விஜய் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு வந்ததாகவும் விஜய்க்காக ஒரு கதையை ரஞ்சித் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் ரஞ்சித் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.