மசாலா படங்கள் எடுத்து எளிதாக பணம் சம்பாதிக்கும் வழி இருந்தும், அவ்வாறு செய்யாமல் தங்களுக்கு மன நிறைவு தரும் படங்களை எடுக்கும் இரண்டு இயக்குனர்கள் ராம் மற்றும் மிஷ்கின் இருவரும் இணைந்து நடித்துள்ள படம். சில பல நாட்களாகவே நம் கோடம்பாக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சவரகத்தி.

#savarakathi #myskkin #ram #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

ஒரு குறிப்பிட்ட ஜானரில் இப்படத்தை அடக்கிவிட முடியாது. ரோடு சேசிங் வைத்து தமிழில் அதிகமாக படங்கள் வந்ததில்லை. அதுவும் நம் நார்த் மெட்ராஸ் பகுதிகளை மட்டும் வைத்து சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் படம் சவரகத்தி.

அதிகம் படித்தவை:  அமீரை அலற விட்ட ட்விட்!
pa-ranjith

இந்நிலையில் படத்தை பார்த்துள்ள இயக்குனர் ரஞ்சித் தன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“நான் படத்தை ரசித்து பார்த்தேன். செம ஜாலி. ராம், மிஷ்கின், பூர்ணா மூவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதித்யா மற்றும் டீமுக்கு வாழ்த்துக்கள். படத்தை பற்றி அனைவரும் பாஸிட்டிவாகவே சொல்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.