ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதேசமயம் இப்படம் தொடர்பாக பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சாதி ரீதியாக ரஞ்சித் மீது தனிமனித தாக்குதலும் நடைபெற்றது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள ரஞ்சித், ” நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே என் படங்களில் குரல் கொடுத்து வருகிறேன்” என்றார்.