Connect with us
Cinemapettai

Cinemapettai

pa-ranjith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசி எச்சரிக்கை.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும்.. ரஞ்சித்துக்கு நீதிமன்றம் விட்ட டோஸ்

பா ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்மேல பலரும் வழக்கு போட்டனர். அந்த வழக்கில் இருந்து இப்பொழுது தீர்ப்பு வந்துள்ளது.

கடந்த 5தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் உமர் பாரூக் நினைவு தின பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி கைதட்டல் வாங்கினார். ஆனால் தமிழக மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் திருப்பனந்தாள் போலீசார் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பா ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் உமர் பாரூக் இன் செந்தமிழ் நாட்டு சேரியில் எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தான் நான் பேசினேன். இந்திய குடிமகனாக எனக்கு பேச்சுரிமை இருக்கிறது என தெரிவித்தார். மேலும் முதற்கட்ட விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய குடிமகன் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது ஆனால் அதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது எனவும் பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறி பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோல் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வந்தால் முன்ஜாமீன் ரத்து செய்யும் உரிமை கோரி நீதிமன்றத்தை போலீசார் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top