fbpx
Connect with us

Cinemapettai

தேரை இழுத்து தெருவில் விடும் பா ரஞ்சித்.. விவகாரமான கதையுடன் தொடங்கும் அடுத்த படம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேரை இழுத்து தெருவில் விடும் பா ரஞ்சித்.. விவகாரமான கதையுடன் தொடங்கும் அடுத்த படம்!

சமீபகாலமாக பா ரஞ்சித் இயக்கும் படங்களும் தயாரிக்கும் படங்களும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமே தூக்கி வைத்து பேசும் வகையிலும், மற்றவர்களை தாழ்த்தி பேசும் வகையிலும் அமைந்து வருகிறது.

இது சம்பந்தமாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் பா ரஞ்சித், சமீபத்தில்கூட தஞ்சாவூரில் உள்ள ராஜ ராஜ சோழன் பற்றிய பேச்சில் மாட்டி சிக்கி சின்னாபின்னம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பா ரஞ்சித் படம் எப்போது வெளிவரும் என காத்துக் கொண்டிருக்கும் வில்லன்களுக்கு மத்தியில் தன்னுடைய அடுத்த படத்தை அதே மாதிரி விவகாரமான கதை யில் தொடங்கும் உள்ளாராம் பா ரஞ்சித்.

ஆர்யா கட்டுமஸ்தான உடலில் நடிக்கும் படம் சல்பேட்டா பரம்பரை. இந்த படத்தில் வட இந்திய வாழ் இளைஞராக வரும் ஆர்யா பாக்ஸராக இருந்து குறிப்பிட்ட சமூகத்தினரால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை தோலுரிக்கும் கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அந்த படத்திற்காக ஆர்யா தனது உடலை தாறுமாறாக ஏற்றியபோது படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் சல்பேட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாம்.

அதுமட்டுமில்லாமல் பா ரஞ்சித் தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வருவதால் இந்த படத்திற்கு அரசியல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

படத்தை படமாக பாருங்க பாஸ்.

Continue Reading
To Top