ஜாதியை தாண்டி படுமோசமான கதையை கையில் எடுக்கும் பா ரஞ்சித்.. அடுத்த சர்ச்சை ரெடி

ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் பல சமூக கருத்து கொண்ட திரைப்படங்களை நமக்கு கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அவர் தன்னுடைய திரைப்படங்களில் அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை தைரியமாக காட்டியிருப்பார்.

இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். அவர் படத்தில் ஜாதி சம்பந்தமாக ஏதாவது ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக இருக்கும். இதனால் அதற்கு பெயர் போனவர் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுவார்கள். கடைசியாக இவர் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து உள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் எந்த இயக்குனர்களும் இதுவரை எடுக்காத, எடுக்க தயங்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி ரஞ்சித் பேசியுள்ளார். அதாவது லெஸ்பியன், கே, பை செக்ஸுவல், ட்ரான்ஸ் ஜெண்டர் போன்றவர்களை பற்றிய கதையை தான் அவர் இதில் உருவாக்கியுள்ளார்.

இந்த மாதிரி திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதியது. மேலும் இது போன்ற திரைப்படங்கள் அதிகம் நாம் சினிமாவில் பார்ப்பது கிடையாது. இது போன்ற மக்களுக்கு நம் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இன்னும் அவர்களை நாம் வித்தியாசமாகத்தான் பார்த்து வருகிறோம்.

இப்படிப்பட்ட ஒரு கதையை ரஞ்சித் கையில் எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கதையை விறுவிறுப்பாக மக்களுக்கு காட்டுவதில் ரஞ்சித் மிகவும் திறமையானவர். இதனால் அவர் என்ன மாதிரியான ஒரு கருத்தை இந்த படத்தின் மூலம் நமக்கு சொல்ல வருகிறார் என்பதை அறிய அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காளிதாஸ் ஜெயராம் ஏற்கனவே பாவ கதைகள் என்ற வெப் சீரிஸில் இதே போன்று ஒரு கேரக்டரை தான் செய்திருந்தார். அதனால் இந்த திரைப்படத்தில் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வருகிறது.