fbpx
Connect with us

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா?

News / செய்திகள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா?

காலா படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.kaala theme music leaked

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருந்த வெங்கட் பிரபு மற்றும் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பா.ரஞ்சித். இதை தொடர்ந்து, நண்பரின் உதவியால் சி.வி.குமார் என்பவர் தயாரிப்பாளராக கிடைத்தார். அவரின் மூலம் அட்டக்கத்தி இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் சூப்பர் வெற்றி இல்லை என்றாலும் நல்ல வெற்றியாக அமைந்தது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கி வெளியிட்டது. இதையடுத்து, அவர்களின் நிறுவனம் அளித்த வாய்ப்பு தான் மெட்ராஸ். இங்கு தான் பா.ரஞ்சித்தின் திரை வாழ்வில் பெரிய ப்ரேக் காத்திருந்தது. முதலில், ஸ்டுடியோ க்ரீனுக்காக பா.ரஞ்சித் சொன்னது சார்பட்ட பரம்பரை என்னும் பெயரில் அமைந்த கதை தான். ஆனால், சில பல காரணங்களால் அப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் தள்ளி போனது. அதை தொடர்ந்தே, மெட்ராஸ் கதையை சொல்லி இருக்கிறார். இதிலும் இம்ரஸான தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு ஓகே சொல்லியது. வட சென்னை பின்னணியில் அமைந்த இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஊடகங்களில் ஆகாஓஹோ புகழ் கிடைத்தது. இதையடுத்து, பா.ரஞ்சித் கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக அறியப்பட்டார்.

இதை தொடர்ந்து, ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அரசியல் பின்னணியில் உருவாகி இருந்த படம் வெளியாகும் முன்னரே, மாபெரும் வரவேற்பை உருவாக்கி இருந்தது. சிறு வலுக்கல் மட்டுமே ஏற்பட்டாலும், படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தது. இதனால், தனது அடுத்த பட வாய்ப்பையும், பா.ரஞ்சித்திற்கே ரஜினிகாந்த் கொடுத்தார். அப்படம் தற்போது காலாவாகி இருக்கிறது. தனுஷ் முதல்முறையாக தனது மாமனார் ரஜினிகாந்த்தை வைத்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். முதல் படத்தின் பின்னணி இப்படத்திலும் பேசப்பட்டு இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

surya

surya

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் நடிகர் சூர்யா என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மெட்ராஸ் படத்தை பார்த்து கவர்ந்த சூர்யா, பா.ரஞ்சித்தை அணுகினார். இருதரப்பும் படத்தை தொடங்கும் நேரத்தில் தான் ரஜினிகாந்த் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இதனால், ரஞ்சித், சூர்யாவை இயக்குவதை தள்ளி வைத்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து கே.வி.ஆனந்த் படத்திலும், இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா படத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படங்களை முடித்து கொண்டோ அல்லது என்.ஜி.கேவிற்கு அடுத்த படமாகவோ ரஞ்சித்தின் படங்கள் இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top