சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து தனது அடுத்தப்படத்தை பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் பா.ரஞ்சித்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை பூர்த்தி செய்துள்ள ரஞ்சித், படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படத்திற்கு பிறகு, பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது.இந்த படத்திற்கான கதையை கூட பா.ரஞ்சித் தயார் செய்துவிட்டாராம்.
“சில மாதங்களுக்கு முன்னர், சூர்யாவை சந்தித்த பா.ரஞ்சித் இரண்டு கதைகளை கூறியிருந்தார்.

ஆனால் அதே சமயத்தில்தான் ரஜினிகாந்தை இரண்டாது முறையாக இயக்கும் வாய்ப்பும் ரஞ்சித்திற்கு கிடைத்தது. எனவே இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்த ரஞ்சித், முதலில் ரஜினி படத்தை இயக்க தயாரானார். இந்நிலையில் சமீபத்தில் எதார்த்தமாக சூர்யாவை சந்தித்த பா.ரஞ்சித், அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் அதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை இந்த கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இருவரும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.” என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.