Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராமின் பேரன்பு பட பார்த்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்ட ஆத்மார்த்தமான பதிவு.

பேரன்பு
மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி நடிப்பில் நாளை மறு நாள் ரிலீஸாக உள்ள படம். பல திரைப்பட விழாக்கள், விருதுகள், பாராட்டு என வசதியுள்ளது இப்படம். இயக்குனர் ராமிற்கு இரு கண்கள் என்றால் அது யுவனின் இசை மற்றும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு.

peranbu
இந்நிலையில் இப்படத்தினை பற்றியும், இயக்குனர் ராம், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவையும் பாராட்டி தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.
நாம் [மனிதர்கள்] மறந்து போன #பேரன்பு’வை மீட்டெடுக்க இதை விட சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிட முடியாது. வாருங்கள் பாப்பாவின்(சாதனா) கண்களில், மீராவின் அரவணைப்பிற்க்குள் உள்நுழைந்து இவ்வுலகை காண்போம். பேரன்பை நிகழ்த்திய அண்ணன் @Director_Ram & குழுவினருக்கு பெரும் வாழ்த்துகள்??
— pa.ranjith (@beemji) January 29, 2019
சூழலின் அதன் எளிய தத்துவத்தை புரிந்து கொண்டு, அந்த தத்துவத்தை மிக லாவகமாக தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் எளிமையாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் #தேனிஈஸ்வர் அவர்களுக்கு பெரும் வாழ்த்துகள் !!!! #பேரன்பு ஒளிர்கின்றது ???
— pa.ranjith (@beemji) January 29, 2019
