Connect with us
Cinemapettai

Cinemapettai

பாசிச வெறிகொண்டு இந்தியா.. போற போக்கில் கொளுத்திப் போட்ட பா.ரஞ்சித்.. பதறிய ‘நிறுவி’ பட இயக்குநர்

naruvi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாசிச வெறிகொண்டு இந்தியா.. போற போக்கில் கொளுத்திப் போட்ட பா.ரஞ்சித்.. பதறிய ‘நிறுவி’ பட இயக்குநர்

“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜா முரளிதரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “நறுவி”. இந்த திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், “பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்துகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் உள்ளோம்.

இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி, இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் வேண்டும்.

இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தேடி தரும். இந்தப்படத்தில் உள்ள காட்சிகள் சிறப்பாக உள்ளது.

தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடமாட்டார்கள். ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top