fbpx
Connect with us

Cinemapettai

போனாப் போகுதுன்னு வாய்ப்பு கொடுத்த ரஜினியை அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்.. ஆணவத்தில் ஆடக்கூடாது சார்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போனாப் போகுதுன்னு வாய்ப்பு கொடுத்த ரஜினியை அசிங்கப்படுத்திய பா ரஞ்சித்.. ஆணவத்தில் ஆடக்கூடாது சார்!

ரஜினி ரசிகர்களே வெறுக்கும் அளவுக்கு ரஜினி படத்தை இயக்கியவர் என்றால் அது பா ரஞ்சித் தான். என்னதான் கபாலி, காலா படம் எல்லாம் சூப்பர் ஹிட் பயங்கர ஹிட் என்று சொன்னாலும் மக்களிடம் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

கபாலி படத்தில் கூட ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். அதுவரை வந்த ரஜினி படங்களில் இருந்து மொத்தமாக மாறி வேறு ஒரு கதை களத்தில் அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றது அந்த படம்.

ஆனால் அதன் பிறகு வந்த காலா படம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. எதுக்கு ரஜினிகாந்த் திரும்ப பா ரஞ்சித் அதற்கு வாய்ப்பு கொடுத்தார் என ரஜினி ரசிகர்களே யோசிக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தார் பா ரஞ்சித்.

காலா படம் முழுக்க முழுக்க கருப்பர்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையிலேயே படம் அமைந்தது. இந்நிலையில் நேற்று கபாலி படம் வெளியாகி நான்கு வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் டுவிட்டரில் தொடர்ந்தனர்.

ஆனால் பா ரஞ்சித் அது சம்பந்தமாக எந்த ஒரு பதிவும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் நேற்று ரஜினிகாந்த் கருப்பர் கூட்டத்தை எச்சரித்து ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்து வேலை செய்பவர் பா ரஞ்சித் தான் என்ற கருத்துக்கள் பரவலாக இருந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் அரசியல் கருத்துக்களை சம்பந்தமே இல்லாமல் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசி மாட்டிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்கேயோ இருந்தவரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை வாழ்த்த மறக்கும் அளவுக்கு சாதி அவரைக் கட்டிப் போட்டு விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

Continue Reading
To Top