Connect with us
Cinemapettai

Cinemapettai

பா ரஞ்சித்தின் சார்பட்டா விமர்சனம்.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

sarpetta-parambarai

Reviews | விமர்சனங்கள்

பா ரஞ்சித்தின் சார்பட்டா விமர்சனம்.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

சார்பட்டா பீரியட் பிலிம், வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் பற்றிய படம். 70 களில் வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரத்தில் சார்பேட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபு பாய் பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை என பல குத்துச் சண்டையைக் கற்றுக்கொடுத்த பயிற்சி மையங்கள் உண்டு. ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை என்பார்கள். இதனை மையப்படுத்தும் படம்.  இது ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அந்த காலகட்டத்தில் உள்ள அரசியல் சூழல், மக்களின் வாழ்வாதாரம் என பலவற்றை இப்படம் சொல்கிறது.

கபிலன் என்ற ரோலில் ஆர்யா. தன் அம்மாவிற்காக பாக்சிங் விட்டு ஒதுங்கி, துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். எனினும் எவ்வாறு எந்த சூழலில் இவர் பாக்ஸராக உருவெடுக்கிறார் என்பதனை சுவாரஸ்யமாக முதல் ஒரு மணி நேரத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர். அதன் பின்பு சீனியர் பாக்ஸர் “டான்சிங் ரோஸுடன்” போடும் சண்டை டாப் க்ளாஸ், எதிர்பார்ப்பை எகிறவைத்து இடைவேளை வருகிறது.

sarpatta-cinemapettai-01

sarpatta-cinemapettai-01

முக்கிய பாக்சிங் மேட்ச் நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பு, மிசா என்ற சூழலில் கபிலன் போட்டியில் தோற்க சதி நடக்கிறது. பாக்சிங் என்ற விளையாட்டை மீறி இங்கு ஜாதி வெறி தலை தூக்குகிறது. இந்த சூழலில் தடம் மாறுகிறான் கபிலன், சாரயம் காய்ச்சுவது, குடிக்கு அடிமை ஆவது என செல்கிறது திரைக்கதை. இறுதியில் தன் வாழ்வின் நோக்கம் உணர்ந்து மீண்டும் முயற்சி எடுத்து எவ்வாறு வெற்றி வாகை சூடுகிறான் என்பதே கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல் – இயக்குனர் பா ரஞ்சித்தின் படங்கள் எந்தவித அரசியலை பேசும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. படங்களில் கமெர்ஷியல் மசாலாவை சேர்த்து அனைவருக்கும் நோக்கம் புரியும் விதம் தனது சினிமா வாயிலாக கருத்துக்களை பதிவிடுகிறார். இப்படமும் விதிவிலக்கல்ல.

கதாபாத்திர தேர்வு, வடிவமைப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே மிகப்பெரிய பிளஸ். பாக்சிங் பயிற்சி, போட்டி நடக்கும் சூழல் மற்றும் மேட்சுகள் அனைத்துமே அசத்தல். 2 மணிநேரம் 53 நிமிட படம், எனினும் துளியும் போர் அடிக்கவில்லை.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– ஸ்போர்ட்ஸ் படமாக மட்டும் எடுத்திருக்கும் பட்சத்தில் வேற லெவல் தமிழ் சினிமாவாக இருந்திருக்கும். சூப்பர் ஆன முதல் பாதி, பின்னர் நாம் எளிதில் யூகிக்கும் வகையில் ஜாதி அரசியல் என முடிகிறது படம்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் ஆடுகளம், வடசென்னை இரண்டு படங்களை கலந்து, அதில் தனது நீலம் சாயத்தை பூசி படமாக்கியுள்ளார் பா ரஞ்சித். ஆர்யா, பசுபதி, கலை இயக்குனர் போன்றவர்களுக்கு கட்டாயம் தேசிய விருது கிட்டும்.

கபாலி, காலா படங்களை விட இந்த சார்பட்டா பரம்பரையின் கபிலன் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டான் என்றால் அது மிகையாகாது. இப்படம் சலிப்பு தட்டாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் ஆர்யா. சூர்யா, விக்ரம் போல தானும் தனது கதாபாத்திரத்திற்காக மிகவும் கடினமாகவும், அருமையாகவும் தயாராகியுள்ளார் கபிலன், ஓ சாரி ஆர்யா.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3.5/5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top