கபாலி, காலாவில் சறுக்கிய பா ரஞ்சித் சார்பட்டாவில் மீண்டது எப்படி? இதை முன்னாடியே பண்ணிருக்கலாமே!

பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா படம் தான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாபிக். பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் நிறைந்துள்ளன. சமூக வளைதளத்தில் இந்த படத்தை கொண்டாடியும் வருகின்றனர்.

இருந்தாலும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். பா ரஞ்சித் படங்களுக்கு இப்படி ஒரு விமர்சனமும் வரவேற்பும் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் போன்ற படங்கள் மூலம் முக்கியமாக அதனுடைய கதைகளின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பா ரஞ்சித். இந்த படங்களை பார்த்துவிட்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு பட வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் ரஜினி மற்றும் பா ரஞ்சித் இருவரும் இணைந்த படங்களில் முந்தைய படங்களை போல் கதைக்களங்கள் மிஸ்ஸிங். ரஜினிக்கு வெறும் மாஸ் காட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்ற அளவுக்கு ஹீரோவுக்காக கதை எழுதி சொதப்பினார் பா ரஞ்சித்.

கபாலி மற்றும் காலா படங்கள் வசூல் ரீதியாக ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் பா ரஞ்சித் அந்த இரண்டு படங்களிலுமே காணாமல் போனார் என்ற கருத்துக்கள் தான் அதிகம் வந்தன. ஆனால் சார்பட்டா படத்தின் மூலம் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் பா ரஞ்சித்.

அதற்கு காரணம் ஹீரோவுக்காக கதை எழுதாமல் கதைக்கான ஹீரோவை தேர்ந்தெடுத்தது தான் என்கிறார்கள் விமர்சன வாசிகள். எப்போதுமே பா ரஞ்சித் கதைகளுக்கான ஹீரோவை தான் தேடுவார். கபாலி மற்றும் காலா படங்களில் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடினார்களே தவிர பா ரஞ்சித்தை கொண்ட ஆளில்லை. ஆனால் சார்பட்டா திரைப்படம் மொத்தத்தையும் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

sarpatta-pa-ranjith-cinemapettai
sarpatta-pa-ranjith-cinemapettai