எப்படியாவது ஒரு சக்சஸ் வேணும் ரஞ்சித்.. விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் விக்ரமுடன் பா. ரஞ்சித் இணையுள்ளார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இது விக்ரமின் 61ஆவது படமாகும். முதல் முறையாக பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் படம் உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார்.மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி பட தெரியவில்லை.

இந்நிலையில் இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் இப்படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பிரீ புரெடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும் வருகிற ஜூலை மாத முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு மைதானத்தை சுற்றியே எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு நாடுமுழுவதும் சில இடங்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இதில் தமிழ்நாட்டிலும் சில இடங்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ளது. மேலும் ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள மைதானம் படத்தையும் விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

- Advertisement -