ஏ ஆர் ரஹ்மான் தொடர்ந்து இந்தியாவில் தனது இசையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இசையின் புகழ் உச்சத்தில் இருக்கும் ஏ ஆர் ரகுமான் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபகாலமாக பல பிரபலங்களும் படங்களை இயக்குவது, கதை எழுதுவது என தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ஏ.ஆர்.ரகுமான் இடம்பிடித்துள்ளார். அதாவது ஏ ஆர் ரகுமான் கதை எழுதி தயாரித்த படம் தான் 99 சாங்ஸ்.
இசையை மையமாகக் கொண்ட இப்படத்தில் 14 காதல் பாடல்கள் இடம் பெற்றன. காதலியை கரம் பிடிப்பதற்காக பாடல்கள் மூலம் காதலன் எடுக்கும் முயற்சியை படத்தின் கதையாக வடிவமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். லாக் டவுனுக்கு முன்பு இப்படம் தியேட்டரில் வெளியானது.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கூட தொகுப்பாளர் ஒருவர் ஹிந்தியில் பேசியதை பார்த்தா ஏ ஆர் ரஹ்மான். உங்களுக்கு தமிழ் தெரியுமா? என்று நான் அப்போதே கேட்டேன் என நாசுக்காக தொகுப்பாளினியின் மீது கோபப்பட்டார். அதுமட்டுமில்லாமல் மேடையை விட்டுக் கீழே இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது ஊரடங்கு காரணமாக ஓடிடி தளத்தில் 99 சாங்ஸ் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான 99 சாங்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பினை பார்த்த பிரபல பாடகி பி.சுசிலா ஏ.ஆர் ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எனது வாழ்க்கை கதையையும் சினிமாவாக படமெடுக்க எனக்கு ஆசை இருக்கிறது. அதை நீங்கள் செய்வீர்களா? என ஏ.ஆர் ரஹ்மானிடம் பி.சுசிலா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.