Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் எடை குறைப்பை நாசுக்கா கலாய்ச்ச ஓவியா.. என்ன இருந்தாலும் நீங்க இப்படி சொல்லிருக்க கூடாது!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர்தான் நடிகர் சிம்பு.
தற்போது சிம்பு தன்னுடைய உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்து மொத்த தமிழ் திரையுலகையே வியக்க வைத்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டை பெற்று வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் தோழியான ஓவியா, சிம்புவின் வெயிட் லாஸ் பற்றி கூறியிருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
அதாவது டான்ஸ் கூட ஆட முடியாமல் தொப்பையை வைத்துக்கொண்டு கிழட்டு தோற்றத்தை பெற்றிருந்த சிம்பு, தற்போது ரசிகர்களே வியக்கும் அளவிற்கு மூன்று மாதத்தில் 30 கிலோ எடையை குறைத்து, மன்மதன் படத்தில் வந்த இளம் வயது சிம்பு போல மாறி இருக்கிறார்.
இவ்வாறு, செம்ம அழகில் ஆளை மயக்கும் ஸ்டைலில் இருக்கும் சிம்புவின் எடை குறைப்பு பற்றி, அவருடைய தோழியான ஓவியாவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு ஓவியா, ‘கஷ்டப்பட்டு உழைச்சா மூணு மாசத்துல யார் வேணாலும் உடம்பைக் குறைக்கலாம்’ என்று கூலாக பதில் சொல்லி இருக்காங்க.
இதைப்பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பலர், ‘எங்க தலைவன் எவ்ளோ கஷ்டப்பட்டு உடம்ப கொறச்சுருக்காரு.. நீ என்னம்மா இப்படி சொல்லிட்ட?’ என்று ஓவியாவை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
