Tamil Cinema News | சினிமா செய்திகள்
ட்ரோல் செய்த நெட்டிசன்.. ஓவியா கொடுத்த நச் பதிலடி
நடிகை ஓவியா தன்னை சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்வதற்கு நச்சுன்னு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் கலகலப்பு, மெரினா, மூடகூடம், மாம யானை கூட்டம் மற்றும் பல மலையாள திரைப்படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் முன்னணி நடிகையாக அவரால் வரமுடியவில்லை.
இந்நிலையில் கமல்ஹாசனின் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்தார்- ஆனால் ஆரவ் காதலை ஏற்கவில்லை.
இந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் மற்றும் சக்தி போன்ற சக போட்டியாளர்களுக்கு எதிராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது நேர்மையான தனித்துவமான அணுகுமுறையால் மிகவும் பிரபலம் ஆனார். இந்த போட்டியில் அவர் டைட்டில் வெல்லவில்லை என்றாலும் மக்களின் இதயங்களை வென்று இருந்தார்.
பிக்பாஸில் கிடைத்த புகழ் காரணமாக ஓவியாவுக்கு லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் களவாணி 2 படத்திலும் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஓவியா தனது ப்ரொபைல் படத்தை ட்விட்டரில் மாற்றியுள்ளார். இந்த தோற்றத்தை பார்த்த ஒரு நெட்டிசன் ஓவியாவின் முடியை வைத்து ட்ரோல் செய்தார். இதற்கு, ஓவியா சரியான பதிலடி கொடுத்தார், “நான் என் மூளையை வளர்க்க முயற்சி செய்கிறேன்.. முடியை அல்ல.. என் தலைமுடி என் தோல் என் பாலினம் இதெல்லாம் ஒரு விஷமே இல்லை மை டியர். நாம் எப்போதும் சுதந்திரமாக இருப்பதால் நாம் அனைவரும் அழகாக இருக்கிறோம் “. என்று கூறினார்.
