oviya-new stills
oviya-new

மெர்சல் பிவருக்கு நிகராக கடந்த சிலமாதங்களாக அனைத்து தமிழர்களிடமும் இருந்து வருவது ஓவியா பிவர். அந்த அளவிற்கு தனது வெளிப்படையான குணத்தால் ஓவியா ஆர்மி என்னும் ரசிகர் படையை தானா சேர்ந்த கூட்டமாக திரட்டுயுள்ளார் ஓவியா.

ஓவியா பற்றி யார் தவறாக பேசினாலும் உடனே எதிர்ப்பு கொடி தூக்கி வருகின்றனர் ஓவியா ஆர்மியினர். தற்போது இதுபோல் ஒரு எதிர்ப்பு கொடி ஓவியாவின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகருக்கு எதிராக எழுந்துள்ளது.

இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்வா இயக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்னும் படத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா, ஆனந்த்ராஜ், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், சிங்கமுத்து போன்றோர் நடிக்கின்றனர். முக்கியமான விஷயம் இதில் ஓவியா நடிக்கிறார். ஆனால் கதாநாயகியாக இல்லை ஓரிரு காட்சிகளில் மட்டுமே வரும் இவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார்.

Vishnu-Oviya-Song
Vishnu-Oviya-Song

அந்த பாடல் காட்சியின் புகைப்படம் ஒன்றை விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பில் வரவிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இந்த புகைப்படம் மூலம் ப்ரோமோ செய்யலாம் என திட்டமிட்டார் அவர். ஆனால் அதற்கு எதிராக தங்கள் தலைவியை ஹீரோயினாக காட்டாமல் கவர்ச்சி நடிகையாய் சித்தரிப்பதாக விஷ்ணு மீது எதிர்ப்பு கொடி தூக்கியுள்ளனர் ஓவியா ஆர்மியினர்.

அருள் நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் இரண்டு கதா நாயகிகளில் ஒருவராக ஓவியா நடித்துவரும் நிலையில் இது போன்று ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் புகைப்படம் வெளியானதில் ஓவியா ஆர்மியினர் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனாறாம்.

Oviya dance

ஓவியா சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கமல் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பம் என்று தெரிவித்திருந்தார். அரசியல் முடிவுகளை ஓவியாவிடம் கேட்கும் அளவிற்கு அவரது புகழ் மீடியாக்களில் பரவி வரும் வேளையில் இந்த புகைப்படம் பலருக்கு வருத்தத்தை அளிப்பதாக உள்ளதாம்.

இந்நிலையில் ஓவியா பற்றி பிக் பாஸ் போட்டியாளரான அனுயா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி என்னவென்றால் “பிக் பாஸ் குடும்பத்தில் யாரும் எனக்கு எதிரி இல்லை, அனைவரையும் நான் ஒன்றாகவே பார்ப்பேன். நான் இரவில் தூங்குவதற்கு முன் பாடும் பழக்கமுடையவள், விளக்குகள் அணைந்தபின் நான் மட்டும் பாடிக்கொண்டே இருப்பேன், சிலர் அது பிடிக்காமல் முகம் சுழிப்பர், ஆனால் ஓவியா என்னை மீண்டும் மீண்டும் பாட சொல்லி ரசிப்பார். மற்றவர்களை பாராட்டவும், அன்பு காட்டவும் ஓவியா எப்போதும் தயங்கியதில்லை. ஓவியாவின் பல நல்ல குணங்களை பிக் பாஸில் காட்டத்தவறிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

அனுயாவின் இந்த பேச்சு ஓவியா ஆர்மியினருக்கு பெரும் மகிழ்ச்சி அளித்திருக்கும் அதே நேரத்தில் விஷ்ணுவின் பதிவு ரசிகர்களை கோவப்படுத்தியுள்ளது.