Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாவது முறையாக காதலில் விழுந்த ஓவியா.. மருத்துவ முத்தம் கிடைக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
படத்தில் நடித்தபோது புகழ்பெற்றாரோ என்னமோ ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப் பெரிய புகழை அடைந்தார் ஓவியா. கடந்த மூன்று பிக் பாஸ் சீசனில் அவருக்கு கிடைத்த வரவேற்பு போல வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
ஆனால் அதில் ஓவராக திமிர் ஏறி 90ml எனும் ஒரு படத்தில் நடித்தார். அநியாயத்துக்கு ஆபாச படமாக வெளிவந்திருந்த அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு நிலவியது.
தனக்கு கிடைத்த புகழை தானே குழி தோண்டி புதைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனது.
இருந்தாலும் அவ்வப்போது பிக்பாஸ் பற்றி தேவையில்லாமல் கருத்துக்கள் கூறி ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் என்பவருடன் காதலில் விழுந்தார் ஓவியா.
அங்கேயே ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட செய்தி பரவி அவர்களது இமேஜை டேமேஜ் ஆக்கியது. இடையில் இருவரும் காதலிப்பதில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்களாம். அவ்வப்போது ஆரவ் மற்றும் ஓவியா தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பட வாய்ப்பு கிடைத்திருந்தால் ஓவியா வேற லெவலுக்கு சென்று இருப்பார் எனவும், அது இல்லாத காரணத்தினால் தான் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய காதலருடன் காதலை தொடங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன.
