ரியாலிட்டி ஷோக்கள் மூலம் புகழ்பெறும் பிரபலங்களுக்கு லக் அடிக்கும்படி வாய்ப்புகள் குவிய தொடங்குவது வழக்கமாகி இருக்கிறது.

இந்த ட்ரெண்டில் முதலில் சிக்கியது பிக்பாஸ் புகழ் ஓவியாவும், ஜூலியும் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் தமிழில் முதல் சீசன் தொடங்கப்பட்டது. கவிஞர் சினேகன், கஞ்சா கருப்பு, ஓவியா, அனுயா, நமீதா, காயத்ரி ரகுராம் என பல பிரபலங்கள் வீட்டுக்குள் குடியேறினர். முதல் நாள் என்னவோ எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை என்பது போல அழகாக தான் சென்றது. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது. திரை பிரபலங்களுக்கு இடையே பொதுவெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் ஜூலியானா. முன்னதாக, இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்தார். அவரின் வீடியோவும் இணையத்தில் வைரல் ஹிட் அடித்தது. ஆனால், அவரின் பெயரோ, ஊரோ தெரியவில்லை.

oviya
oviya

இவரை தேடிப்பிடித்து கூட்டி வந்தது விஜய் தொலைக்காட்சி. அவரை மொத்த குடும்பமும் எதிரியாக பார்க்க தொடங்கியது. அந்த சூழலில் அவருக்கு ஓவியா, பரணி, கணேஷ் தான் துணையாக இருந்தனர். கடைசியில் இவர்களுக்கே கட்டையை கொடுத்து விட்டு எதிரி கோஷ்டியுடன் சேர்ந்து பரணியையும், ஓவியாவையும் ஜூலி டார்கெட் செய்தது தனிக்கதை. இதை தொடர்ந்து, வீட்டில் நடந்த குழப்பங்களால் ஓவியா தானாக வெளியேறினார். ஜூலி மக்களால் வெளியேற்றப்பட்டார். இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், வெறுப்பும் பலமாகவே கிடைத்தது.

புகழை ஓவியா பயன்படுத்தி கொள்ளாமல் தனக்கு தேவையான வாய்ப்பை மட்டுமே பயன்படுத்தி கொண்டார். ஆனால், ஜூலியோ வசையையே வசமாக பயன்படுத்தி விளம்பரம் முதல் பட வாய்ப்பு வரை தட்டினார். அட இதெல்லாம் தெரிஞ்ச கதைனு நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது.

இதே பாணியில், ஜனவரியில் தொடங்கப்பட்டது தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. 16 பெண்களுடன் பழகிய ஆர்யா ஒருவரை தனது துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், கலந்து கொண்டவர் கும்பகோணத்தை சேர்ந்த அபர்ணதி. யார் சொன்ன எனக்கு என்ன? யார் இருந்த என்ன? என்ற ரீதியில் மனதில் பட்டதை படார் என வெடிப்பது தான் இவரது கேரக்டர். இவரின் இந்த குணத்திற்கே என்னமோ ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியது.

இந்நிலையில், இந்த புகழால் அபர்ணதிக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் முன்னோட்டமாக ஒரு நிறுவனம் அவரை வைத்து போட்டோஷூட்டை நடத்தி முடித்து இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.