வாய்ப்பே இல்லாமல் திணறி கொண்டிருந்த நடிகர் நடிகைகளை வைத்து பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை வைத்து கோடிகளை அள்ளிய விஜய் டிவி அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளும் நிறைய வாய்ப்புகள் வரும்னு எல்லாம் எதிர்பார்த்தார்கள். அதில் ஓவிய ரொம்பவே ஸ்பெஷல்.

ஓவியா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் இன்று உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டார். ரசிகர்கள் ஆதரவு மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களின் ஆதரவை அதிகமாகவே பெற்று விட்டார், இதனால் இவரை இயக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Parvathyஇந்நிலையில் அடுத்ததாக பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சேதுபதி நடிக்க இருந்த அடுத்த படத்தில் ஓவியாவை கமிட் செய்வதாக இருந்தனர்.

ஆனால் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால் பார்வதி நாயரை கமிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.