Connect with us

Cinemapettai

சிம்பு இசையில், பெண் டைரக்டர் இயக்கத்தில் ஓவியா ! டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !

Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு இசையில், பெண் டைரக்டர் இயக்கத்தில் ஓவியா ! டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் சினிமா மார்க்கெட் பன் மடங்கு உயர்ந்து விட்டது. ஓவியா தற்பொழுது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’, ‘ஓவியாவை விட்டா யாரு’, ‘சீனி’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, விமலுடன் இணைந்து ‘களவாணி 2‘ ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.

oviya

இந்நிலையில் ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் ஓவியா நடிக்கிறார் என்றும் மேலும் படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார் போன்ற செய்திகள் வெளிவந்தன.

simbu & oviya – marana mattai

நேற்று காதலர் தினத்தன்று இப்படத்தினை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பே வந்துள்ளது. மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா உதீப் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இவர் இதற்கு முன் குளிர் 100 என்ற பள்ளி கேம்பஸ் நிகழ்வுகளை வைத்து படம் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு 90 மில்லி என்று பெயர் வைத்துள்ளனர். ஓவியா டீ குடிப்பது போன்ற முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப் படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கிறாராம். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி.

90 ml flp

சந்தானம் நடித்த, ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு முதன்முறையாக சிம்பு இசை அமைத்திருந்தார். தற்பொழுது ஓவியா நடிக்கும் படத்துக்கு சிம்பு இசையமைப்பில் இரண்டு பாடல்கள் கம்போசிங் முடிந்து விட்டது என்று கூறிவருகின்றனர்.

நயன்தாரா போல் ஓவியாவும் ஹீரோயினை மையப்படுத்தும் படத்தில் நடிப்பதால் ஓவியா ஆர்மி குஷி ஆகியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top