Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களை ஏமாற்றிய ஓவியா.! அட என்னாப்பா இப்படி ஆகிடுச்சி.!
90Ml திரைப்படம் 22ம் தேதி தான் முதலில் ரிலீஸ் ஆக இருந்தது, ஆனால் தற்பொழுது ரிலீஸ் தேதி மார்ச் 1 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இதனை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் நடித்த களவாணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, அதன் பிறகு இவருக்கு எந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் அனைத்து ரசிகர்களின் மனதிலும், மக்கள் மனதிலும் இடம் பிடித்தார், அதன்பின்பே இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் அமைந்தது.
இந்நிலையில் தற்போது இவர் 90ml என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஓவியா ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தற்போது கிடைத்துள்ளது.

oviya 90 ml
ஏனென்றால் திரைப்படம் வருகின்ற 22ம் தேதி தான் முதலில் ரிலீஸ் ஆக இருந்தது, ஆனால் தற்பொழுது ரிலீஸ் தேதி மார்ச் 1 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இதனை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு LKG படத்திற்கும் கண்ணே கலைமானே என்ற படத்திற்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
Hey Guys, Due to TechnicAl reAsons #90ML will be releAsing Worldwide on MArch 1st .
Keep ur excitement high & As plAnned will meet you All At 5 AM show on MArch 1st ??
CongrAtz for @RJ_Balaji 's LKG & @Udhaystalin 's KanneKalaimane ??#90MLFromMarch1st
Cheers ? pic.twitter.com/6MJgQAlRhd— Oviyaa (@OviyaaSweetz) February 18, 2019
