விஜய் தொலைகாட்சி நடத்தி வரும் biggboss நிகழ்ச்சியில் ஓவியா,ஆரவ் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது சமூகவளைதலங்களில் இவர்களின் காதல் கதைதான் அதிகம் பேசப்படுகின்றன. oviya

 

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவிடம் காதல் வசப்பட்டது போல் ஓவியா நடந்து கொண்டார். இத்தனை நாள் வரை அவரிடம் நெருக்கமாகவும், அவரிடம் ஆறுதலாகவும் பேசி வந்த ஆரவ், தற்போது எல்லோரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால், தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா கேரியர் பாதிக்கும் என திடீர் ஞானோதாயம் ஏற்பட்டு ஓவியாவை விட்டு விலக முயல்கிறார்.

இது ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ஓவியாவை அவர் கைகளால் அரவணைத்துப் பிடித்திருக்கும் காட்சி, அவரின் பின்புறம் காலால் விளையாட்டாக உதைக்கும் புகைப்படம் என அனைத்தையும் வெளியிட்டு இப்போது என்ன சொல்கிறாய் ஆரவ்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள் ஓவியாவின் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ‘ ஓவியாவிடம் ஆரவ் மன்னிப்பு கேட்கிறார். அதேபோல், காதல் இருக்கிறதா இல்லையா என வெளிப்படையாக கூறிவிடு என ஓவியா ஆரவ்விடம் கேட்க, எனக்கு உன்மேல் காதல் எதுவும் இல்லை என ஆரவ் கூறுகிறார். இது கேட்டு ஓவியா அதிர்ச்சியடைகிறார்.

 

??

????

Posted by Vijay Television on Thursday, August 3, 2017