பிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கு பெரும் ஆர்மி இருக்கிறது என்று தெரியும் அதற்காக இப்படியா? நேற்று நடந்த சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவிற்கு ஊர்பட்ட கூட்டம், OMR சாலையே ஸ்தம்பித்தது.

இதைவிட பெரிய கூத்து எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் லைவ்வாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டதுதான். கூட்டத்தை சமாளிக்க காவல் துறை பெரிதும் போராடியது. கடையின் வாசலில் மேடையிட்டு அதில் ஓவியாவை பேச வைத்து கூட்டம் சேர்த்தது சரவணா ஸ்டோர்ஸ்.oviya

நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் பிரியங்கா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஓவியா கொக்கு நெட்ட கொக்கு பாடலை பாடிக்கொண்டே ஆடினார்.

இதோ நேற்றைய நிகழ்ச்சியின் முக்கய காட்சிகள் உங்கள் பார்வைக்கு

இறுதியில் ஓவியா தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை அள்ளி வழங்கினார். அதை பெரும் ஆரவாரத்தோடு அடித்து பிடித்து வாங்கிக்கொண்டனர் ஓவியா ஆர்மியினர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதென்ன நீங்க கடை துறக்க நடு ரோட்ல மேடை போடுறது? அந்த கடைய தாண்டி போறதுக்குள்ள நேத்து ஒவ்வொருத்தனும் செத்து சுண்ணாம்பாகிட்டானுங்க!