விஜய் தொலைகாட்சி நடத்திவரும் கமல் தொகுத்து வழங்கும் biggboss நிகழ்ச்சி முடிவை நெருங்குகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அந்த 100 வது நாள் இன்னும் சில நாட்களில். விறுவிறுப்பான சுவாரசியாமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னனும் சில போர் அடிப்பது போல ஒரு ஃபீலிங் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் ஓவியாவுக்கு இந்நிகழ்ச்சியால் பெரும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அவரும் வெளியேறிவிட்டார். பின் ரசிகர்களிடையே சற்று தொய்வு வந்தது போல ஒரு நிலை.

ஓவியா மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தாலும் நேற்று வையாபுரியிடம் கமல் சொன்னதை வைத்து இறுதியில் அனைத்து போட்டியாளர்களும் வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தற்போது ஓவியா, லைவ் சேட் வேண்டும் என நிறைய பேர் ட்வீட் செய்துள்ளதை பார்க்கிறேன். உங்களை போலவே நானும் எதிர்ப்பார்க்கிறேன். பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சாட் செய்யலாம் என ட்விட்டரில் கூறியுள்ளார்.