கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனது சுய விருப்பத்தின் படி ஓவியாவும், மக்களின் விருப்பப்படி ஜுலியும் வெளியேற்றப்பட்டனர்.இதில் ஓவியா வெளியேற ஜூலிதான் காரணம் என்று அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வெளியேறிய ஜூலிக்கு கமல் அறிவுரைகள் வழங்கினர். ஓவியா வெளியேற ஜூலிதான் காரணம் என்பதையும் சுட்டி காட்டினார். கடைசியாக அனுப்பும்போது கமல் தனது ரசிகர்களுக்கும், ஓவியா ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில் எனது தங்கையை அனுப்பி வைக்கிறேன். அவருக்கு எந்த பிரச்னையும் கொடுக்க வேண்டாம். மன்னித்து விடுங்கள் அவருக்கு தனி வாழ்க்கை இருக்கிறது. அதனை வாழ விடுங்கள் என்றார். அப்போது அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் உங்களுக்காக மன்னிக்கிறோம் என்றனர்.அதன்பிறகு ஜூலி வெளியில் வந்தது முதல் வீட்டிற்கு சென்றது வரை ஓவியா ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டின் முன்பும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை பரணி தான் பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் பரணிக்கு எதிராக ஜூலி செயல்பட்டாலும் அவர்தான் தற்போது அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது.