பிக் பாஸ் என்றால் நம் நினைவிற்கு வருவது விஜய் டி.வி யோ, உலகநாயகனோ இல்லீங்க. இப்போதைக்கு பிக் பாஸ்னு ஒரு நிகழ்ச்சி இருக்குறதே ஓவியாக்காகதான். என்னதான் ஓவியா அந்த நிகழ்ச்சிலேந்து வெளிய வந்துட்டாலும் தினம் தினம் ஓவியாவின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுகிட்டேதாங்க வருது.

இந்த மாதம் அதிகம் ஊடகங்களில் வந்த நபர் என்ற பெருமையை பெற்றிருப்பது நம்ம ஒவியாதாங்க. சரி கதைக்கு வருவோம். சிலுக்குவார்பட்டி சிங்கம்னு ஒரு படம், அதுல ஹீரோ விஷ்ணு, ஹீரோயின் ரெஜினா. இந்த படத்துல ஓவியாவும் நடிக்குறாங்க. அவுங்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதால ஓவியா திரும்ப வந்தவுடன் மீதி படப்பிடிப்பை எடுத்துக்கலாம்னு படக்குழு விட்டுடாங்க.

திரும்பி வந்த ஓவியா இப்போ தமிழ் இன்டஸ்டிரிலையே டாக் ஆப் தி டவுன்னா ஆகுவாங்கனு யாரு எதிர்பார்த்தது. அந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு போய்டாங்க ஓவியா. இப்போ ஓவியா வந்து இந்த படத்துல நடிச்சால் படம் சூப்பர் ஹிட் ஆகும்னு படக்குழு நினைக்குறாங்க.

oviya out from biggbossஆனால் ஓவியா தனக்கு கொஞ்சம் மன அமைதி வேணும், அதுக்கப்றம்தான் படத்துல நடிக்க முடியும்னு சொல்லிடாங்க. நீங்க எப்போ வர முடியுமோ அப்போ வாங்க நீங்க வந்தா மட்டும் போதும்னு படக்குழு சொல்லிடாங்க. படபிடிப்பு முக்கால் வாசி முடிவடைந்த நிலைல ஓவியாவின் காட்சிகளை படமாக்குவதற்காக ஒட்டு மொத்த படக்குழுவும் வெய்டிங்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு யாரு எதிர்பார்த்தது.