பிக் பாஸ்:

வரலாற்றை பொறுத்தவரை கிமு,கிபி என்று பிரிப்பது போல், தமிழ்நாட்டில் செலிபிரிட்டி அந்தஸ்தை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பின் என்று பிரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஓவியா ஹெலன்:

களவாணி மஹேஸ்வரியாக பரிச்சயமான இவர், பிக் பாஸ் மூலமாக நம் வீட்டிற்குள் நுழைந்தவர், இன்று  நம் மனதிலும் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் என்ன செய்தாலும் அது வைரல் ஆகி வரும் நிலையில், இவர் பல படங்களில் நடிப்பார் என்று நாம் நினைத்தால், இவரோ படங்களை அதிகமாக கமிட் செய்யாமல், டிவி ப்ரோக்ராம், கடை திறப்பு, கலை நிகழ்ச்சி என்று அதில் கலந்துக்கொண்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.

அதிகம் படித்தவை:  சிம்பு இசையில், பெண் டைரக்டர் இயக்கத்தில் ஓவியா ! டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !

சர்ச் பார்க் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றார் ஓவியா. அப்பொழுது  அங்கு நிகழ்ச்சி முடியும் பொழுது  சர்வைவா பாடல் போட, ரசிகர்களுடன் இணைந்து தல அஜித் ஸ்டைலில் மாஸ் நடனம் போட்டுள்ளார் ஓவியா. இதோ அந்த வீடியோ.

அதிகம் படித்தவை:  Oviya Latest Stills

விழாவின் ஆரம்பத்தில் இவர் ‘கொக்கு நெட்ட கொக்கு’ பாடலை பாடினார். மேலும் சில ட்ரெண்டியான பாடல்களுக்கு நடனம் அடினார்.

https://www.youtube.com/watch?v=25oEkCAQl6M

அங்கு இருந்த ஓவியாவின் ரசிகர்கள் தங்கள் கைப் பேசியில் ரெகார்ட் செய்து யு-டியூப்பில் அப்லோட் செய்துள்ளனர்.