Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணத்திற்காக டிவிட்டரில் ரசிகரிடம் பயோடேட்டா கேட்ட ஓவியா.. மகிழ்ச்சியில் ஆர்மியினர்
எப்போ கல்யாணம் எனக் கேட்ட ரசிகரிடம், ஓவியா பயோடேட்டா கேட்ட டுவீட் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஒரே கேர்ளாக ரசிகர்களிடம் எக்கசக்க லைக்கை பெற்றவர் ஓவியா. நள்ளிரவு மழையில் நனைவது, பிக்பாஸிடம் திருட்டுத்தனமாக பனானா, க்ரீன் டீ கேட்டது, காலை பாடலுக்கு ஆடியது என சின்ன வீடியோக்கள் மூலம் இன்னும் ஓவியா ஆர்மியினர் அவரை வைரல் புகழில் மட்டுமே வைத்துள்ளனர்.
ரசிகர்களை ஆர்மி என முதன் முதலில் அழைக்க தொடங்கியதும் இந்த க்ரூப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை தனமான ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்த கடைசி நேரத்தில் அழுகையை மட்டுமே தக்க வைத்திருந்தார்.
அவரின் சிரித்த முகத்தை மட்டுமே பார்த்த ஆர்மி தினம் தினம் அவரின் அழுகையால் உடைந்தது. பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் சண்டை போட்டாலும், விடை பெறும் போது ஒரு பார்மாலிட்டி தழுவல்களை வாடிக்கையாக்கினர். ஆனால், ஓவியாவின் வெளியேற்றம் கூட பலரை கவர்வதாகவே இருந்தது. யாருக்கும் ஒரு பாய் சொல்லாமல், இந்த செண்டிமென்ட்டெல்லாம் வேணாம் எனச் சொல்லி வெளியேறினார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா, வந்த வாய்ப்புகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னால் முடிந்தவற்றில் மட்டுமே ஒப்பந்தம் ஆனார்.
இந்நிலையில், பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு ஓவியா தனது முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பாராட்டுக்களை தெரிவித்தனர். பிறந்தநாளை ஓவியாவும் தன் ரசிகர்களுடன் டுவிட்டரில் கொண்டாடினார். அதில், அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த சில பதில்கள் சுவாரசியத்தின் உச்சம்.
ஒரு ரசிகர் ‘எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. அப்படி ஆச இருந்துச்சுன சொல்லுங்க நானே உங்கள கல்யாணம் பண்ணிக்குறன்’ என டுவீட்டி இருந்தார். பயோடேட்டா அனுப்புங்க என கண்ணடித்து போட்ட பதில் தான் இணைய உலகில் இன்றைய வைரலாகி இருக்கிறது.
