Connect with us
Cinemapettai

Cinemapettai

oviya-aarav

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏமாற்றிய காதலனை மறைமுகமாகத்தாக்கிய ஓவியா.. பழி தீர்க்கும் ஓவியா ஆர்மி!

படத்தில் நடித்தபோது பிரபலமானாரோ இல்லையோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எக்கச்சக்க ரசிகர்களை கைவசப்படுத்தினார் ஓவியா.

ஆனால் எல்லாம் கனவாக போகும் வகையில் பிக்பாஸ் முடிந்தவுடன் அவரது ரசிகர்கள் அவரை கண்டுக்க வில்லை. அதற்கு காரணம் கேடுகெட்ட 90ml படத்தில் நடித்தது தான்.

இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே நடிகர் ஆரவ் உடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்து அங்கேயே முத்தங்களை பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் திடீரென ஓவியாவை கழட்டி விட்டு வேறு ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார் ஆரவ். திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் ஓவியா மட்டும் வரவில்லை.

ஆரவ் தன்னை ஏமாற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் அவர் மறைமுகமாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இது காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்துவிட்டது.

oviya-tweet

oviya-tweet

இதனால் ஓவியா தற்போது பெரும் மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதைப்போல காட்டிக் கொள்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top