fbpx
Connect with us

ஒரே நாளில் இன்டர்நெட்டால் செலிபிரிட்டி அந்தஸ்து பெற்றவர்கள் லிஸ்ட் ! டாப் 5 !

Top Stories / சிறந்த கட்டுரை

ஒரே நாளில் இன்டர்நெட்டால் செலிபிரிட்டி அந்தஸ்து பெற்றவர்கள் லிஸ்ட் ! டாப் 5 !

சாதாரணமாக தங்கள் வேலையை செய்தவர்களை இணையம் ஒரு நாளில் செலிபிரிட்டி ஆக்கியது என்றால், பலரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது நிதர்சனமான உண்மையாக நடந்துள்ளது. அந்த நபர்களின் லிஸ்ட் இதோ ..

பிரியா பிரகாஷ் வாரியார்

Priya P Varrier

புது முக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். “ஒரு ஆதார் லவ்” என்ற படத்தில் உள்ள “மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய கிளிப் மூலமாக இந்த வருட காதலர் தின ஸ்பெஷல் ட்ரெண்டிங் இவர் தான். 30 நொடி வீடியோ கிளிப் . புருவ டான்ஸ் இவரை உச்சத்துக்கு கொண்டு போய் விட்டுவிட்டது.

சைமா ஹுசைன் மிர்

Saima Hussain Mir – SID

ஷாருக் கான் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த படம் ரயீஸ். இப்படத்திற்காக பல ப்ரோமஷன் வேலைகளை செய்தார் ஷாருக். அந்த வகையில் ஸிம்பயோசிஸ் கல்வி குழுமத்திற்கு சென்றார். அங்கு தான் கிளிக்கிய போட்டோ ஒன்றையும் தன் பேஸ் புக் பக்கத்தில் அப்லோட் செய்தார். அந்த போட்டோ வைரல் ஆனது. காரணம் ஷாருக் அல்ல. முதல் வரிசையில் இருந்த ஸ்ரீநகரை சேர்ந்த சைமா ஹுசைன் மிர் தான் . அவர் அங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி. அன்றிலிருந்து சில நாட்களுக்கு இவர் செலிபிரிட்டி தான் சென்ற இடங்களில் எல்லாம்.

அர்ஷத் கான்

HOT CHAIWALLAH- Arshad Khan

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் டீ கடையில் வேலை பார்த்தவர். இவரது போட்டோ இணையத்தில் வர ” ஹாட் சாய்வாளா” என் ஹாஸ் டாக்கிட்டு செலிபிரிட்டி ஆனவர். அப்பொழுது அவர் வயது வெறும் 17 தான். ஜியா அலி என்ற போட்டோக்ராபர் இந்த நீல கண் உடையவரை சண்டே பாஜாரில் போட்டோ எடுத்தார். அந்த போட்டோ வைரலானதும் டாக் ஷோ, மாடெல்லிங் கான்ட்ராக்ட் என்று பிஸி ஆகிவிட்டார் இந்த பாய்.

டாக்டர் மைக்

மிக்கேல் வர்ஷாவஸ்கி. இன்ஸ்டாகிராமில் ஹாட் டாக்டர் இவர் தான். 2 . 6 மில்லியன் மக்கள் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை லைக் செய்துள்ளனர். நியூ யார்க்கை சேர்ந்தவர். செய்தித்தாள் ஆர்டிகிள் வாயிலாக அறியப்பட்டவர். இன்று சமூகவலைதளத்தால் செலிபிரிட்டி ஆனவர். பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

மதுரா ஹனி

மற்ற நால்வரும் நல்ல விஷயத்தால் ரீச் ஆனவர்கள். ஆனால் இவர் மட்டும் எதிர்மறை பார்வையால் செலிபிரிட்டி ஆனவர்.லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்கவிழா பார்த்தவர்கள் இந்த சிகப்பு டாப்ஸ் , ப்ளூ பாண்ட் அணிந்த பெண்ணை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

photobomb_gir

இந்திய வீரர், வீராங்கனைகளுடன் இவரும் உடன் நடந்து சென்றார். யார் என்று ஒருங்கிணைப்பாளர்களுக்கே தெரியவில்லை. இணையத்தில் பலரும் தேட, இவர் தன் பேஸ் புக் கணக்கை டெலீட் செய்தார். இவரைப்பற்றி இந்திய ஒலிம்பிக் கமிட்டீ விசாரணை கூட நடத்தியது. ” போட்டோ பாம்ப கேர்ள் ” என்று வர்ணிக்கப்பட்டார் அந்த நேரத்தில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Top Stories / சிறந்த கட்டுரை

Advertisement

Trending

To Top