Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெகட்டிவ் கமெண்ட்களுக்கு இடையில் மாஸ் காட்டிய விஜய்.. ஒரே நாளில் இத்தன கோடி கலெக்சனா
பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியாகி சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் ரசிகர்கள் பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் தாக்கம் இன்னும் யாருக்கும் குறைந்தபாடில்லை. படம் குறித்த பல தகவல்களும் இன்னும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில் முக்கிய தகவலாக இந்த திரைப்படத்தின் ஒரு நாள் கலெக்சன் எவ்வளவு என்ற தகவல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இப்படம் நேற்று விடுமுறை இல்லாத தினத்தில் வெளியான போதிலும் தமிழ்நாட்டில் முதல் நாள் ஓபனிங் கலெக்சன் மட்டும் 30 லிருந்து 35 கோடி வரை வசூல் ஆகியுள்ளது.
இந்த வசூல் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம். வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரிnமாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதல் நாள் 28 கோடி வரை வசூல் செய்தது. இதை வைத்து பார்க்கும் பொழுது பீஸ்ட் திரைப்படம் தற்போது முன்னிலையில் இருக்கிறது.
நேற்று படம் வெளியாகி முதல் காட்சி முடிவடைந்த உடனேயே படம் பற்றிய பல நெகடிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. மேலும் விஜய் ரசிகர்களே படம் சுமாராகத்தான் இருக்கிறது என்ற ஒரு அதிர்ச்சியான தகவலையும் கொடுத்தார்கள்.
இதையெல்லாம் வைத்து படம் எப்படியும் கலெக்ஷனில் பின்தங்கி விடும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் இவ்வளவு எதிர்மறை விமர்சனங்களுக்கு இடையிலும் படம் இவ்வளவு கோடி வசூலை குவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வசூல் அடுத்தடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அடுத்த நான்கு தினங்கள் விடுமுறை தினம் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் நிச்சயம் அதிகமாக காணப்படும். இதனால் இந்த வசூல் இன்னும் அதிகரித்து படம் ஒரு ரெக்கார்ட் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பு நிர்வாகம் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவலை வெளியிடவில்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
