சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையோ அலையென்று அலைந்து வருவார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடித்த இரண்டு படங்களிலே ஆளே மாறி போன அளவுக்கு அவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படித்தான் காலங்காலமாக நடிகர், நடிகைகள் மற்றும் பலர் இதையே பின்பற்றி வருகிறார்கள். இந்த வரிசையில் இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒருவர் வளர்ந்து வருகிறார்.
ஆரம்பத்தில் நல்ல குடும்பப் பெண்ணாக பெயர் வாங்கி வந்த ஒரு பொண்ணு. இப்பொழுது அவரை பார்க்கும் போது இவரா அந்த பொண்ணு என்று அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு மோசமான பெயரை வாங்கி வருகிறார். அது என்னமோ தெரியவில்லை சினிமாவுக்குள் நுழைந்ததுமே இப்படித்தான் ஆயிருவாங்களோ.
Also read: அதல பாதாளத்தில் தொங்கும் விஜய் சேதுபதி.. பத்து நாளில் இத்தனை படம் பிளாப்பா.?
இந்த பொண்ணு சென்ற இடம் எல்லாம் ஓவர் ஹெட் வெயிட், ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுகிறது. மனசுல என்னமோ பெரிய ஹீரோயின் நினைப்பு இந்த மாதிரி பேசும் அளவிற்கு தான் நடந்து கொள்கிறார். இந்த பொண்ணுக்கு ஒன்றும் அவ்வளவு பெரிய வயசு கூட கிடையாது. ஆனால் இது பண்ற அலப்பறையே தாங்க முடியல.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டீஸ் எல்லாம் இந்த மாதிரி இல்லாமல் ஓரளவு டீசன்டாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பெண் மட்டும் தலைகால் புரியாமல் ஆடுகிறது. இது தேர்ந்தெடுக்கும் படங்கள் கூட ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. இதுதான் இப்படி இருக்குன்னா இதை கண்டிக்க கூட ஆள் இல்லாமல் ஆட்டம் போடுகிறது.
முக்கியமாக படத்தில் நடிப்பதற்கு 50லட்சம் மற்றும் 70 லட்சம் கொடுங்கள் என்று பேரம் பேசி வருகிறதாம். அந்த திமிரு புடிச்ச பொண்ணு வேற யாரும் இல்லை என்னை அறிந்தால், விசுவாசம், மாமனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் அனிகா. அதிலும் விசுவாசம் படத்தில் அஜித்திற்கு பெண்ணாக நடித்து, அந்த செண்டிமெண்ட் பாட்டை பார்க்கும் பொழுது நம்மளை அறியாமலேயே ஒருவித உணர்வை கொடுக்கும்.
அப்படி அடக்கம் ஒடுக்கமாக நடித்த பொண்ணு தற்போது எல்லா ஹீரோயின்களையும் விட ஓவரா ஆட்டிட்யூட் காட்டி வருகிறது. ஓ மை டார்லிங் என்ற படத்தில் கவர்ச்சியில் மிக மோசமாக நடித்திருக்கிறது. இவர் விஜய் சேதுபதிக்கு மகளாக மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி முன்னணி ஹீரோகளுக்கு மகளாக நடித்துவிட்டு இந்த பொண்ணு பண்ற அலப்பறை கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.
Also read: லேடிஸ் சூப்பர் ஸ்டாரை மிஞ்ச போகும் குட்டி நயன்தாரா.. ஹீரோயினாக வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்