பொதுவாக அவுட்டோர் படபிடிப்பு என்றால் நடிகர் நடிகைகள், இயக்குனர் கேமராமேன் யூனிட் என செம ஜாலி என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது ஓரளவு உண்மை என்றாலும் கூட பகலில் நாம் வேடிக்கை பார்க்கும் ஷூட்டிங் வேறு.

இரவுகளில் அனைவரும் தங்கி இருக்கும் விடுதிகளில் நடக்கும் விஷயங்கள் முற்றிலும் வேறு. வாங்க கொஞ்சம் பார்ப்போம்.

பொதுவாக மூன்று விதமான லாட்ஜ்களில் படப்பிடிப்பு குழுவினர்கள் தங்க வைக்கப்படுவார்கள்.

பெரிய ஹீரோ, ஹீரோயின் முக்கியமான நடிகர்,நடிகையற்கு அந்தந்த ஊர்களில் இருக்கும் ஸ்டார்ஹோட்டல்கள் ரூம்  புக் பண்ணி தங்க வைக்கப் படுவார்கள். ஒருநாள் வாடகையே பல ஆயிரங்கள் இருக்கும்.

இரண்டாவது, இயக்குனர், கேமராமேன், ஆர்ட் டைரக்டர் போன்றவர்களுக்கு இரண்டாம் தர வசதியுள்ள லாட்ஜ்கள் போட்டுக் கொடுப்பார்கள்.

மூன்றாவது, தொழில் நுட்பக் கலைஞர்கள்,  துணை நடிகர்,நடிகையர்கள் போன்றவர்களுக்கு மூன்றாம் தரமான விடுதிகள் ஒதுக்கிக் கொடுப்பார்கள்.

இங்கு வெந்நீர் வசதிகளோ, நல்ல குடிநீர் வசதிகளோ இருக்காது. ஒரே அறையில் மூன்று நான்கு பேர் கூட தங்கவைக்கப்படுவார்கள். சுத்தமான பெட்ஷீட் கூட இருக்காது. (இது எல்லாக் கம்பெனிகளுக்கும் பொருந்தாது.)

இவர்களில் தொழில் ரீதியாகப் பழகிய ஆண்கள், பெண்களை மொய்க்கத் துவங்குவார்கள்.

இரவு அவர்களின் அறைகளுக்கே சென்று கடலை போடுவதும்,சரக்கு போடுவதும் ஜாலியாக மொட்டை மாடிகளுக்கு சென்று  அரட்டை அடிப்பதும், முடிந்தால் பிடித்தவர்களோடு ஜாலி பண்ணுவதும் நடக்கும்.

எப்படியும் அனைவரும் தூங்குவதற்கு  இரவு இரண்டு மணி ஆகிவிடும். மூன்றாம் கட்ட விடுதிகள் தான் சிக்கலே.. கண்டிப்பாக மது ஆறாக ஓடும். பெண்கள் விசயத்தில் அடிதடி கலாட்டா நடக்கும்.

குடித்து விட்டு மல்லுக்கு நிற்பதும், தொல்லை கொடுக்கும் மேனேஜர்களை இழுத்துப் போட்டு அடிப்பதும்.. துணை நடிகைகளை  அழைப்பதும் என காக்டெய்ல் கொண்டாட்டம் தான்.

துணை நடிகையரை பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதும் இங்கு அதிகம் என்கிறார்கள். ‘ஏண்டா அவுட்டோர் வந்தோம்’ என்று கதறியபடி ஊருக்கு ஓடிப் போகும் பெண்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்த பெரிய நடிகர்கள், நடிகையர் இருக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் எல்லாமே நடக்கும். ஆனால் காதும் காதும் வைத்தது போல கமுக்கமாக நடந்து முடிந்து விடும்.

ஆனால் மறுநாள் ஷூட்டிங்..!? எதுவுமே தெரியாதது போல பரபரவென்று நடக்கும். அனைவரும் அனைத்தையும் மறந்து விடுவார்கள்.

அன்று இரவு மீண்டும் ரணகளம் ஆகும். இப்படி மொத்த சூட்டிங் கம்பெனிகளையும் சொல்லி விட முடியாது. இதைவிட அதிகம் நடக்கும் அவுட்டோர் ஷூட்டிங்களும் உண்டு என்கிறார்கள்.

கேட்கவே பயமாக இருக்கிறது.