OTT-யால் கேள்விக்குறியான விஜய் சேதுபதி ஹீரோ வாழ்க்கை.. அட! போங்காப்பா நீங்களும் உங்க தியேட்டரும்

சமூக இடைவேளை, ஊரடங்கு உத்தரவு என்று மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது கொரோனா. அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பல கோடிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரையரங்குகள், மால்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களான OTT, எப்படியாவது மக்களை இந்த பிளாட்பார்மில் மட்டுமே பார்க்க வைப்பதற்கு என்ன தூண்டுதல் உண்டு அனைத்தையும் செய்து வருகின்றனர். இதனால் 1000 கணக்கில் தியேட்டர்கள் மூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.

இதற்காக பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு வலை வீசி வருகின்றனர். அடுத்தப்படியாக, இந்த வலையில் சிக்க போவதுதான் விஜய்சேதுபதி. அதாவது, பொன்மகள் வந்தாலே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின், அட்லியின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் போன்ற படங்கள் OTT-யில் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் OTT-யில் வருவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி கோவில்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளதால், தியேட்டரில் வெளியிட்டால் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகத்தில் தயாரிப்பாளர்கள் OTT தளத்தை அணுகியுள்ளனர்.

தற்போது கூட ஜோதிகாவின் தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு ‘சிறப்பு’ என்று பதிலளித்திருந்தார் விஜய் சேதுபதி. இது ஒரு தனி மனிதனின் சுதந்திரம் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல் உள்ளதாம்.

இதனால் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பே ரணசிங்கம் படம் இணையதளத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இரண்டு தளங்களில் பட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. க/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் மற்றுமொரு படமான ‘இடம் பொருள் ஏவல்’ OTT தளத்தில் வெளியிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் சூழ்ந்துள்ள இயலாமையை பயன்படுத்தி கார்போரேட் நிறுவனமான OTT தளங்கள், களத்தில் இறங்கி இருப்பது சினிமாவிற்கு தர்மசங்கடமான சூழ்நிலை தான். ஆனாலும் நேர்த்தியான முடிவுகளை படக்குழுவினர் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.