fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திருநங்கையை கொன்று நாடகமாடிய திருநங்கைகள்.. பதற வைக்கும் மாங்காடு கொலை சம்பவம்

transgender-murder-mangadu

Tamil Nadu | தமிழ் நாடு

திருநங்கையை கொன்று நாடகமாடிய திருநங்கைகள்.. பதற வைக்கும் மாங்காடு கொலை சம்பவம்

சௌமியா என்ற திருநங்கையை மற்ற திருநங்கைகள் கொன்று ஏரியில் தூக்கிபோட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பற்றின செய்திகளை பார்க்கலாம்.

திருநங்கைகள் எப்போதும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருவார்கள். அவர்களுக்குள் எந்த ஒரு பிரிவும் வராமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை கடந்த வருவார்கள்.

ஆனால் சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் சவுமியா என்ற திருநங்கையை மற்ற திருநங்கைகள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வசந்த் என்ற வசந்தி, செல்வமணி என்ற ஸ்ரேயா, வெங்கடேசன் என்ற ஆர்த்தி, மனோஜ் என்ற மனிஷா, சபிக்ஷா, திவ்யா, ரோஸி என்ற வினோதினி, சங்கர் என்ற சுதா, அசோக் என்ற ரெஜினா ஆகிய திருநங்கைகள் சௌமியாவை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்கள் அந்தப் பகுதியில் இருக்கும் கடைகளில் வசூல் செய்து அதனை பங்கிட்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். கடந்த ஆறாம் தேதி வசூல் செய்த பணத்துடன் மது வாங்கிக் கொண்டு அனைவரும் கல்குவாரி குட்டையில் மது அருந்தியுள்ளனர்.

வழக்கமாக சௌமியாவை தேடி நிறைய கஸ்டமர்கள் வருவார்கள். அதனால் அவர் நிறைய பணம் கேட்டுள்ளார். அப்போது வசூல் செய்த பணத்தால் சௌமியாவிற்கு மற்ற திருநங்கைகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது போதையில் இருந்த மற்ற திருநங்கைகள் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சௌமியா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை திருநங்கைகளின் சங்க தலைவியான மகாலட்சுமி காதிற்கு சென்றுள்ளது. உடனே அவர் அந்த கல்குவாரி லேயே அந்த உடலைத் தூக்கி போட்டுவிட்டு வரும்படி கூறியுள்ளார். கல்குவாரியில் உடலை கண்டுபிடித்த போலீசார் அது யார் என அறிந்து மீண்டும் அதே தோழியிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் சங்கத் தலைவியான மகாலட்சுமி சௌமியாவை கொன்ற திருநங்கைகளிடம் தினமும் 3000 ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு அடித்து துன்புறுத்தி மிரட்டி வந்துள்ளார். இதனால் திருநங்கைகள் அந்த மாங்காடு போலீஸ் ஸ்டேஷன்களில் சரணடைந்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். போலீசார் சங்கத்தலைவி மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top