Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வருடமும் வரிசைகட்டி நிற்கும் விஜய் சேதுபதி படங்கள்.. வயித்தெரிச்சலில் முன்னணி நடிகர்கள்
வரவர தெலுங்கு சினிமாவில் தமிழ் நடிகர்களுக்கு மவுசு ஏறிக்கொண்டே செல்கிறது. நடிகர்கள் சம்பத், சமுத்திரக்கனி வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர்களுக்கு வில்லனாக தொடர்ந்து பல படங்களில் புக் செய்யப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி சினிமாவுக்கு வரும் போதே ஒரு தீர்க்கமான முடிவுடன் தான் வந்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களில் கேரக்டர் நன்றாக இருந்தால் ஒரு காட்சி என்றாலும் நடிக்க வேண்டுமென்ற கணக்கில்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அவரது அதிர்ஷ்டம் பல படங்களில் ஹீரோவாக வெற்றி பெற்றார். ஹீரோவாக சறுக்கும் நேரத்தில் கேரக்டரை பிடித்துக்கொண்டு வில்லனாக பிரபல நடிகர்களை மிரட்டினார். பத்தாததுக்கு தெலுங்கில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்துப்போகவே தற்போது தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
உப்பண்ணா என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் வில்லனாகவும் மேலும் ஒரு தெலுங்கு படத்திற்கு வில்லனாகவும் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஒரு படம் நடித்த நடிகருக்கு கோடிக்கணக்கில் சம்பளமா என தெலுங்கு நடிகர்கள் வயித்தெரிச்சலில் உள்ளனர்.
தமிழிலும் இன்னும் சோடை போகவில்லை. கிட்டதட்ட எட்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. பத்தாததுக்கு தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமை உள்ளவங்க எங்கிருந்தாலும் சேர் போட்டு உட்காரத்தான் செய்வாங்க..
