தலைக்கனம் இல்லாத லோகேஷ் கனகராஜ்.. பெருசுங்க கொஞ்சம் பார்த்து கத்துக்கோங்க

தமிழில் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜை பார்த்து இயக்குனர் வினோத் மற்றும் நெல்சன் திலீப்குமார் தன்னடக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீசாக உள்ளது இத்திரைப்படத்தின் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தான் இயக்கிய மாநகரம்,கைதி, மாஸ்டர் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆனால் இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் சரி, ரசிகர்களும் சரி கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தின் திருப்தி அடையாமல் பேசியது அவரது தன்னடக்கத்தை தெளிவாக காட்டுகிறது என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் தற்போது உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தை நன்றாக எடுத்துள்ளதாகவும், ஆனால் அடுத்த பத்து வருடங்கள் கழித்து கண்டிப்பாக இத்திரைப்படத்தை வேறுமாதிரியாக எடுத்து இருக்கலாமே என்று தனக்கு தோன்றும் எனவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

இதனிடையே தல அஜித்தின் வலிமை படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் ஹெச்.வினோத் பேசியபோது, ரசிகர்களுக்கு என்னுடைய திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்றே தெரியவில்லை என பேசினார். அதேபோல இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியை குறித்து பேசியபோது ரசிகர்கள் இன்று ஒரு மாதிரி கூறுவார்கள்,நாளை வேறு ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதை ஒரு மாதிரி பேசுவார்கள். இதெல்லாம் நடக்கிற காரியம் தான் என இவர்கள் இருவரும் ரசிகர்களை உரை கூறினர்.

ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மூன்று திரைப்படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையிலும் அதிருப்தி அடைந்து அதில் இன்னும் சிறந்த காட்சிகளை வைத்திருக்கலாமே என்று சொல்லும் அளவிற்கு தன்னடக்கத்தோடு நடந்து வருகிறார்.இதை ஹெச் வினோத் மற்றும் நெல்சன் திலீப்குமார் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்