Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ரஜினி.! விருதை கைப்பற்றுவாரா
பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பின் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கமலஹாசன் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தும் கலந்துகொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதற்காக ரஜினிகாந்த் நடிகர் பார்த்திபனை வீடியோ மூலம் வாழ்த்தியுள்ளார்.
இந்தியாவிலேயே பார்த்திபன் கதை வசனம் எழுதி, இயக்கி நடித்து இருப்பது ஹாலிவுட்லேயே இல்லாத ஒன்று என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் ஒரு படம் வெற்றி அடைவதற்கு நான்கு வழிகள் என கூறியுள்ளார்.
படத்தின் கதை கரு புதுமையாக இருக்க வேண்டும் என்றும், இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்றாக இருக்க வேண்டும், நல்ல கருத்தை சொல்வதாக இருக்க வேண்டும் , குறைந்த பட்ஜெட்டில் படத்தை இதை வைத்து எடுத்திருக்க வேண்டும் கூறியுள்ளார்.
எதார்த்தமாகவும் படம் எடுக்க வேண்டும் என்றும் நான்காவதாக படம் வெற்றியடைய நல்ல விளம்பரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நான்கு அம்சங்களும் ஒத்த செருப்பு படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் வெற்றிகளும் விருதுகளும் பார்த்திபன் பெறுவார் என ரஜினிகாந்த் பெருமையாக கூறியுள்ளார்.
