fbpx
Connect with us

Cinemapettai

ஒத்த செருப்பு – ஹிந்தியில் நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? பார்த்திபன் வெளியிட்ட பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒத்த செருப்பு – ஹிந்தியில் நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? பார்த்திபன் வெளியிட்ட பதிவு

பார்த்திபன் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிரம்மாண்ட சாதனை படைத்த திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படம் உலக அளவில் பேசப்பட்டு பல விருதுகளை தட்டிச் சென்றது என்பது தமிழ் சினிமாவின் பெருமை என்றே கூறலாம்.

தற்போது இந்த படத்தை பழமொழிகளில் ரீமேக் செய்யப்போவதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. அதிலும் முக்கியமாக ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் என்பதை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சமுக வலையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நவாஸுதீன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் ஒரு கொலை செய்து அதில் இருந்து தானாகவே எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதுதான்.இந்த படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கியமான காரணம் படம் முழுவதும் பார்த்திபன் மட்டும்தான் காட்சியில் வருவார்.

இந்த செய்தியை கேட்டவுடன் மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு முறை இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் அதுதான் பார்த்திபனின் கதை சுவாரஸ்யம் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரம்மாண்ட படைப்பு காண்பது அரிது ஆகையால் பார்த்திபன் போன்ற இயக்குனர்களை ஊக்குவித்து உலகளவில் தமிழ் சினிமாவை மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top