நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமியின் அடுத்த படம்தான் ஒரு பக்க கதை.இந்த படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ளார். இந்தப்படம் முழுமையாக எடுத்து முடிந்து பல மாதங்கள் ஆன போதும் சென்சார் பிரச்சனையால் வெளிவராமல் நின்றது.

இந்த படத்தில் ஹீரோயின் உச்சரிக்கும் ஒரு கெட்ட வார்த்தையால் சென்சார் குழு படத்திற்கு A சான்றிதழ் கொடுப்போம் அல்லது அந்த வார்த்தையை mute செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.ஆனால் இது இரண்டையும் மறுத்த இயக்குனர் அந்த வார்த்தை கட்டாயம் படத்தில் இடம் பெரும் என்று பிடிவாதமாக இருந்தார்.இதனால் பல மாதங்களாக படம் இழுபறியில் இருந்தது.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற சென்சார் தலைவர் அந்த காட்சியை பார்த்துவிட்டு அதற்கு ஒப்புதல் வழங்கியதுடன் U/A சான்றிதழும் வழங்கியுள்ளார்.இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள படக்குழு படத்தின் வெளியீட்டிற்காண முழு வேலையில் இறங்கியுள்ளது.

விரைவில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற நல்லதொரு படத்தை திரையில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.